News

Sunday, 04 September 2022 12:09 PM , by: T. Vigneshwaran

Mother's brutality

புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் நகரப் பகுதியில் ஹவுசிங் போர்டில் வசித்து வரும் தம்பதியினர் ராஜேந்திரன், மாலதி இவர்களுடைய மகன் பால மணிகண்டன். காரைக்கால் நகரப் பகுதியான நேரு நகரில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்றும் பள்ளிக்கு சென்றுள்ளார். காலை 11:00 மணி அளவில் ஒரு பெண்மணி பள்ளி வாசலில் உள்ள கேட்டிருக்கு வந்துள்ளார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த வாட்ச்மேன் என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்மணி எட்டாம் வகுப்பு படிக்கும் பால மணிகண்டனிடம் இந்த குளிர்பானத்தை கொடுக்குமாறு கூறியதாக வாட்ச்மேன் தெரிவித்தார்.

அவர் உடனடியாக வகுப்பறையில் இருந்த பால மணிகண்டனிடம் அதனை கொடுத்துள்ளார். சிற்றுண்டி இடைவேளையில் அந்த குளிர்பானத்தை பால மணிகண்டன் குடித்துள்ளான். நேற்று பள்ளி ஆண்டு விழா என்பதால் மதியும் அனைத்து மாணவர்களும் விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பாலம் மணிகண்டன் வீட்டுக்கு செல்லும்போது வீட்டில் வாந்தி எடுத்துள்ளான். அதனைப் பார்த்த பெற்றோர்கள் உடனடியாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதன் பிறகு பெற்றோர் மற்றும் உறவினர்கள் குளிர்பானத்தை யார் கொடுத்தது என்று விசாரித்து வந்தனர். அந்த நிலையில் பள்ளிக்கு சென்று இதை யார் கொடுத்தது என்று விசாரணை செய்துள்ளனர். அப்போது கேட்டில் இருந்த வாட்ச்மேன் ஒரு பெண்மணி வந்து கொடுத்தார் என்பது ஒப்புக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி மூலம் அதனை உறுதிப்படுத்தியதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

விசாரணையில் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவியின் தாய் குளிர்பானத்தை கொடுத்தது தெரிய வந்தது அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் முன்னுக்கு முரணான தகவலை தெரிவித்ததாகவும் குளிர்பானத்தை நான் கொடுக்கவில்லை என்றும் பிஸ்கட் மட்டுமே நான் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சிசிடிவி காட்சியில் அவர் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:

TNPSC: குரூப் 2, 2ஏ பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் எப்போது?

ஒரு நாளில் ரூ.5.68 லட்சம் கோடி வருமானம்! எப்படி தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)