தொடர் மழையிலும் தாக்குப்பிடிக்கும் வகையில் புதிய நெல் ரகங்களை கண்டுபிடிக்குமாறு கலெக்டர் அர்ஜூன்சர்மா (Arjun Sharma) வலியுறுத்தினார். காரைக்காலை அடுத்த செருமாவிலங்கை கிராமத்தில் பண்டித ஜவகர்லால் நேரு அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (பஜன்கோவா) செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆண்டு கால விவசாய இளங்கலை வேளாண் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாக, நேரடி களப்பயிற்சி (Direct field training) அளிக்கப்பட்டு வருகிறது.
வேளாண் கண்காட்சி:
கொரோனா (Corona) தொற்று காரணமாக, காரைக்காலில் 23 மாணவ, மாணவிகளும், மற்ற பகுதிகளில் 98 மாணவர்களும் அந்தந்த பகுதியில் களபயிற்சி மேற்கொண்டனர். அப்போது விவசாயிகளிடம் கண்டுபிடித்த, பாரம்பரிய தொழில்நுட்பங்களின் ஒரு நாள் வேளாண் கண்காட்சி (Agricultural Exhibition) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கண்காட்சிக்கு கல்லூரி முதல்வர் ஷமராவ் ஜஹாகிரிதர் தலைமை தாங்கினார். வேளாண் பொருளியல் மற்றும் விரிவியல் துறை தலைவர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஆனந்தகுமார் அறிமுக உரையாற்றினார். கண்காட்சியை கலெக்டர் அர்ஜூன்சர்மா தொடங்கி வைத்தார்.
புதிய வகை நெல் ரகம்
சமீபகாலமாக தொடர் மழையால் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் (Paddy crops) அழுகி வருகின்றன. இதுபோல் விவசாயிகளின் உழைப்பு வீணாவதை ஏற்க முடியவில்லை. மழை, வெள்ளத்தினால் நெற்பயிர்கள் வயலில் சாயாமல், தாக்குப்பிடிக்கும் வகையில் புதியவகை நெல் ரகங்களை (New varieties of paddy) கண்டறிய மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
காப்புரிமை
விவசாயிகளின் பாரம்பரிய தொழில் நுட்பங்களை ஆவணமாக்கி, காப்புரிமை (Patent) போன்ற ஆதாய உரிமைகளை பெறலாம். கடந்த 4 மாதமாக களபயிற்சி மேற்கொண்டு, தங்கள் அனுபவங்களையும், விவசாயிகளின் உழைப்பையும் கண்காட்சியாக்கிய, பேராசிரியர், மாணவர்களை மனதார பாராட்டுகிறேன்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இயற்கை விவசாயத்தை கடைபிடிக்க வேண்டுகோள் விடுக்கும் இயற்கை விவசாயி!
மானாவாரிப் பயிர் நிவாரணத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்! வருவாய்த்துறை தகவல்!