தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘இந்த ஆண்டு பாலிடெக்னிக் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர் சேர்க்கை இணையவழியில் 2022ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதியன்று தொடங்கப்படவுள்ளது.
கல்லூரி மாணவர் சேர்க்கை (College student admission)
10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். சென்னை, மதுரை, திருச்சி, கரூர், நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது 13 கல்லூரிகளில் முதலாவதாக புதிய பாடத்திட்டங்கள் தொடங்க இருப்பதாகவும் கூறினார். நீட் தேர்வுக்கு பின்னரே பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும். இது தொடர்பான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.
கல்வியினை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும். கட்டண உயர்வு குறித்து AICTE கூறி இருந்தாலும் கூட, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு சென்ற ஆண்டு வசூலித்த அதே பழைய கட்டணம் தான் வசூலிக்கப்படும். மேலும், AICTE சொல்வதைப் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று பிரதமரிடம் நேரில் எடுத்துரைத்த ஒரே முதல்வர் ஸ்டாலின் அவர்கள்தான். புதிய கல்விக்கொள்கையை அரசு தொடர்ந்து எதிர்க்கும். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் இடைநிற்றல் அதிகமாகும்.
தமிழக அரசு சார்பில் விரைவில் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். பொறியியல் கலந்தாய்வில் கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகள் ஆன்லைன் வழியாக நடைபெறும் என்றும் கூறினார்.
மேலும் படிக்க
குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைத்தாள் வெளியீடு!