இன்று முதல் கேஸ் சிலிண்டர் விலை 36 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு மட்டுமே விலை குறைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உணவகங்கள், ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை இன்று முதல் 36 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை குறைப்பு (Cylinder Price Reduced)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டருக்கு இந்த விலை குறைப்பு பொருந்தாது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14 கிலோ சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இன்று முதல் வணிக சிலிண்டர் விலை சென்னையில் 2141 ரூபாயாக உள்ளது. பெங்களூருவில் 2063.50 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 2197.50 ரூபாயாகவும், மும்பையில் 1936 ரூபாயாகவும், டெல்லியில் 2012.50 ரூபாயாகவும் உள்ளது.
உணவகங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் எடை 19 கிலோ ஆகும். வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் எடை 14 கிலோ மட்டுமே. இதற்கு முன் ஜூலை 6ஆம் தேதி 19 கிலோ வணிக சிலிண்டர் விலை 8.50 ரூபாய் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டது IRCTC!