News

Thursday, 11 August 2022 06:36 PM , by: R. Balakrishnan

Computer Training

மைக்ரோசாப்ட் நிறுவனம் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்துடனும், திறன் உருவாக்க ஆணையத்துடனும் இணைந்து பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த 25 லட்சம் ஊழியர்களுக்கு கணினி அறிவை அதிகரிக்கும் பயிற்சியினை வழங்க உள்ளது. இதன் மூலம் பொது மக்கள் சார்ந்த சேவைகளை அவர்களால் சிறப்பாக வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

கணிணி பயிற்சி (Computer Training)

கணிணி பயிற்சி தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த திட்டம் அரசு ஊழியர்களுக்கு டிஜிட்டல் முறையில் அதிகாரம் அளிக்கும். இதன் மூலம் சமூகத்தின் பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு பயனுள்ள சேவைகளை திறமையாக வழங்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் செக்ஷன் அதிகாரிகள், உதவி செக்ஷன் அதிகாரிகள், கிளர்க், அப்பர் டிவிஷன் கிளர்க், லோயர் டிவிஷன் கிளர்க், கீழ்நிலை செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

பாதுகாப்பு அமைச்சகம், நிதி அமைச்சகம், சமூக நிதி, விமானப் போக்குவரத்து, கப்பல் மற்றும் துறைமுகங்கள், தொழிலாளர் அமைச்சகம் உள்ளிட்டவற்றில் திறன் மேம்பாட்டு திட்டங்களை சிபிசி மேற்கொள்கிறது. இந்த வேலைகளில் இருப்பவர்கள் மைக்ரோசாப்ட் ஆபிஸ் செயலிகளான வேர்ட், எக்சல் மற்றும் பவர்பாய்ன்ட் சமர்பிப்பு போன்றவற்றை தொழில்முறையாக உருவாக்குவதில் பின்தங்கியுள்ளதை பார்க்கிறோம். எனவே அரசின் பங்களிப்பின் கிழ் வழங்கப்படும் பயிற்சியால், அதிகாரிகள் தங்கள் டிஜிட்டல் உற்பத்தி திறன்களை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

அதனால் அவர்கள் பல்வேறு அமைச்சகங்களில் தங்கள் பணியினை திறம்பட நிறைவேற்ற முடியும். இந்த கணிணி பயிற்சி அரசு ஊழியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள உதவுவதோடு, டிஜிட்டல் பயன்பாட்டையும் வெகு விரைவில் கற்றுக் கொள்ள முடியும்.

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்கு 4758.78 கோடி ரூபாய் நிதி விடுவிப்பு: மத்திய அரசு!

வருமான வரி செலுத்துவோர், இனி இந்த பென்சன் திட்டத்தில் சேர முடியாது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)