கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு திட்டத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரிய கலையான களரிப்பயட்டை தேசிய விளையாட்டாக (National Game) அறிவித்ததற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
களரிப்பயட்டு:
களரிப்பயட்டு - ரத்தத்தை துள்ளச்செய்யும் மண்சார்ந்த விளையாட்டு. இதற்கு உலகில் சரியான இடம் கிடைக்க வேண்டும். இவ்விளையாட்டிற்கு அதிக உடல்திறனும் மன ஒழுக்கமும் தேவை. இதை தேசிய விளையாட்டு போட்டிகளில் சேர்த்திருப்பது, கிராம மக்கள் பங்கேற்க அவர்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுக்கும் என தனது ட்விட்டர் (Twitter) பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சிப்காட் தொழிற்பூங்காக்களில் 2.63 லட்சம் மரக்கன்றுகள் நடவு!
தேசிய விளையாட்டு போட்டிகளில் சேர்ப்பு:
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேலோ இந்தியா (Khelo India) திட்டத்தின் மூலம் கட்கா, களறிப்பயட்டு, தங்-டா, மல்லர்கம்பம் ஆகிய 4 விளையாட்டுகள் தேசிய விளையாட்டு போட்டிகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், ‘யோகாசனா (Yogasana)' அறிமுக விளையாட்டாகவும் (debut Sport) இடம்பெற உள்ளது. இப்போட்டிகள் அடுத்தாண்டு ஹரியானாவில் நடத்தப்படும் எனவும் கேலோ இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தோட்டக்கலைத் துறையின் புதிய பரிசுத் திட்டம்! பசுமைப் பரிசு பெட்டகம்!
ஈஷாவுக்கு விருது:
‘ஈஷா கிராமோத்ஸவம் (Isha Gramotsavam)' என்ற பெயரில் தமிழக கிராமங்களில் இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் விளையாட்டு போட்டிகளை ஊக்குவித்து வரும் ஈஷாவுக்கு, மத்திய விளையாட்டு துறை அமைச்சகம், "கேல் புரோத்சாஹன் புரஸ்கார் (Gale Protsahan Award)" விருதை வழங்கி கெளரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊடக தொடர்புக்கு:
90435 97080
78068 07107
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளைத் தேடி வந்து உதவும் வேளாண் துறையின் புதியத் திட்டம்!
கலப்பட கருப்பட்டியை தடுக்கக் கோரி விவசாயிகள் கோரிக்கை!