பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 March, 2024 12:05 PM IST
Steadily Rising Gold Rate Graph

தங்கத்தின் விலை பொதுவாகவே கடும் ஏற்ற இறக்கத்தை சந்திப்பது வழக்கம். இதனிடையே, கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்றும் வர்த்தக தொடக்கத்திலயே விலை உயர்வை எட்டியுள்ளது. நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.85 வரை அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் பொது மக்களிடையே அதிகமாகவே உள்ளது. இதனிடையே இன்று சென்னை மற்றும் கோவையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 வரை விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் நேற்றைய 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.6015 ஆக விற்ற நிலையில் இன்று ரூ.25 அதிகரித்து ரூ.6040 ஆக விற்பனையாகிறது. சவரன் (8 கிராம்) ஒன்று ரூ.48,320 ஆகவும் விற்பனையாகிறது. நேற்றைய தினம் சவரன் ரூ.48,120 ஆக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக சென்னை திகழ்கிறது. கோவையிலும் இதை விலை நிலவரம் என்பது கூடுதல் தகவல்.

வெள்ளி விலை:

அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பணவீக்கம், பணமதிப்பிழப்பு போக்குகளைப் பொறுத்து வெள்ளி விலையில் மாற்றம் காணப்படுவது வழக்கம். அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் போது, வெள்ளியின் விலை அதிகரிக்கிறது. தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் நேற்றைய விற்பனை நிலையுடன் ஒப்பிடுகையில் 20 காசுகள் வரை குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.78 ஆகவும், கிலோ ஒன்றிற்கு ரூ.78000 ஆகவும் விற்பனையாகிறது.

தங்கத்தின் ஹால்மார்க்கில் சந்தேகமா?

தங்க நகைகள் அதன் தூய்மையைக் குறிக்கும் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதைப்போல் தங்கத்தை எடைப்போடுவதற்கு பயன்படுத்தப்படும் எடைகள் மற்றும் அளவுகள் சட்ட அளவியல் துறையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். விலைப்பட்டியலில் தங்கத்தின் எடை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

தங்கத்தின் தூய்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் BIS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் (A&H) மையத்திற்கும் செல்லலாம். சோதனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும். BIS அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களின் பட்டியல் கீழே உள்ள இணையதளத்தில் இங்கு காணலாம்.

https://www.manakonline.in/MANAK/AHCListForWebsite

நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களில் விழிப்பாக இருங்கள்.

pic courtesy: unsplash

Read more:

அரசின் மானியத்தோடு வீட்டுக் கொல்லைப்புறத்தில் அலங்கார வண்ண மீன் வளர்ப்பது எப்படி?

பாசிப்பயறு மற்றும் நிலக்கடலையில் புதிய இரகம் வெளியீடு- கைக்கொடுக்குமா விவசாயிகளுக்கு?

English Summary: Constantly Shocking due Steadily Rising Gold Rate Graph in chennai area
Published on: 06 March 2024, 12:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now