News

Thursday, 08 May 2025 05:50 PM , by: Harishanker R P

விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையையடுத்து, மலட்டாறில் ரூ.3.44 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டும் பணி துவங்கி உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான மலட்டாறு விழுப்புரம் மாவட்டம், திருப்பாச்சனுார் பகுதியில் இருந்து பிரிந்து செல்கிறது

தென்பெண்ணை ஆற்றில் ஆண்டு தோறும் மழை வெள்ள நீர் சென்றாலும், அதிலிருந்து பிரிந்து செல்லும் மலட்டாறு மேடாக மாறியதால், அதிகளவில் வெள்ளம் வரும்போது மட்டும் தான் மலட்டாரில் தண்ணீர் செல்கிறது. மற்ற நேரங்களில் வரண்டு கிடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் துவங்கி புதுச்சேரி, கடலூர் மாவட்ட கிராமங்கள் வழியாக செல்லும் மலட்டாறு, கடலுார் மாவட்டம், சின்னக்காட்டுப்பாளையம் அருகே வங்க கடலில் கலக்கிறது.

நீண்ட கால கோரிக்கை

விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மாநில விவசாய பாசனம், நிலத்தடி நீராதாரமாக விளங்குவதால், மலட்டாற்றை துார் வாரி சீரமைக்க வேண்டும், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மலட்டாறில் புதிய தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. விழுப்புரம் அருகே கொங்கம்பட்டு கிராமத்தில், ரூ.3.44 கோடி மதிப்பில், புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு, நீர்வளத்துறை சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு கட்டுமான பணி துவங்கி உள்ளது.

தடுப்பணை


மலட்டாற்றின் குறுக்கே 70 மீட்டர் நீளம், 1.50 மீட்டர் உயரத்திலும் கான்கீரிட் கட்டமைப்புடன் புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. தமிழக அரசு தடுப்பணை கட்டும் பணியை கடந்த ஆண்டு அறிவித்தாலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான், கட்டுமான பணிகள் தாமதமாக துவங்கி நடந்து வருகிறது.

தடுப்பணைக்கான அடித்தள கான்கிரீட் பணிகள் முடிந்து, அடுத்த கட்ட பணிகள் நடந்து வருகிறது. அணை கட்டும் பணிக்கு 1 ஆண்டு காலம் அவகாசம் உள்ளது. தற்போது 25 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதாகவும், அடுத்த 3 மாதங்களுக்குள் தடுப்பணை பணிகள் முடிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலட்டாற்றில் ஏற்கனவே பூவரசன்குப்பம், வீராணம் பகுதிகளில் தடுப்பணைகள் உள்ளன. அவைகள் நீண்டகால பயன்பாட்டால் வீணாகியுள்ளது. தற்போது கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணையால், சுற்று பகுதியில் உள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும், விவசாயத்திற்கும் பயனுள்ளதாக அமையும்.

Read more:

மரபணு திருத்தப்பட்ட 2 நெல் ரகம்: மத்திய அமைச்சர் சவுகான் அறிமுகம்

பாசன கிணறுகளில் மின் மோட்டார் மாற்றும் திட்டம் - மின்துறை அமைச்சருக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)