தமிழகம் முழுவது கடந்த சில தினங்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. காற்று வீசும் திசை மாறிக் கொண்டே இருப்பதால் தென்மேற்குப் பருவமழை மேலும் தீவிரமடைந்த வருகிறது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு பிறகு மேலும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற இடங்களில் வழக்கத்தைவிட விட அதிக மழை பெய்யும் வானிலை ஆய்வாளர் கூறியுள்ளார். காற்றின் திசையானது தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல இருக்கிறது. எனவே சென்னை, புதுவை உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் கேரளா எல்லையோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு விடும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அவிலஞ்சியில் ஒரே நாளில் 82 செ.மீ மழை பெய்துள்ளது.
இதுவரை சராசரி மழையான 206.8 மி.மீ அளவை விட, 22% அதிகம் பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 400 மி.மீ வரையிலான மழை பொலிவு பெய்ய இருப்பதால் மழை நீர் சேகரிப்பு உபகரணங்களைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Anitha Jegadeesan
Krishi Jagran