சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 30 August, 2019 11:21 AM IST

காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாக்கி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இன்று லேசான முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக தேனி, திண்டுக்கல் ஆகிய இரு மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. மதுரை, மேலூர் சுற்று வட்டாரங்களில் மாலை 1 மணி நேரம் தொடர்ந்து கனமழை கொட்டியது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம்,  ஜெயமங்கலம், மேல்மங்கலம், சில்வார்பட்டி, வடுகப்பட்டி, தேவதானபட்டி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் காற்றின் வேகமாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் பல்வேறு இடங்களில் பரவலான மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச மழை பொழிவாக சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் திவள்ளூர் பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

https://tamil.krishijagran.com/news/chennai-weather-update-tamil-nadu-and-puducherry-seems-to-receive-convective-rainfall-for-next-24-hours/ 

k.Sakthipriya
Krishi Jagran 

English Summary: Continuous Rains in Theni and Dindukal districts: Expected Heavy Rainfall in Western Ghats
Published on: 30 August 2019, 11:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now