
தமிழகத்தில் வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை மக்களை வறட்சியில் இருந்து மீட்டுள்ளது.
வேலூர், காட்பாடி, வாணியம்பாடி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக வாணியம்பாடியில் குறிப்பிடும் வகையில் பரவலாக மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் தொடங்கிய மழை தொடர்ந்து 3 நாட்கள் விடாமல் பெய்தது, நேற்று இரவும் கனமழை பெய்துள்ளது.
வேலூரில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளன. பெரம்பலூரில் நேற்று இரவு பெய்த கனமழையால் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. ஓராண்டிற்கு பிறகே இத்தனை மழை பெய்துள்ளதாக பெரம்பலூர் மக்கள் தெரிவித்தனர்.

சென்னையில் பட்டினம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.
கேரளாவில் பெய்த கனமழையால் எல்லையோர மாவட்டங்களான பெரிய குளம், தேக்கடி, தேனி பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. மேலும் தேனி மாவட்டம் வைகை அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் வைகை அணையின் நீர் மட்டம் 16 அடி அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
K.Sakthipriya
Krishi Jagran