தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விதிகளை மதிக்காமல் அத்துமீறியவர்களிடம இருந்து ரூ.3.45 கோடியை போலீஸார் அபராதமாக வசூலித்துள்ளனர்.
கொடூரக் கொரோனா (Cruel corona)
உலகெங்கிலும் நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஒவ்வொரு அரசும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் குறைந்து இருந்த நோய் பரவல் தற்போது அதிகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவற்றை விதித்துள்ளது.
அரசின் இந்தக் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவோர் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் அத்துமீறி செயல்பட்டவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை ஆணையர் கூறியதாவது:- மாநிலம் முழுவதும் காவல்துறையினரால் ஜனவரி 2வது வாரத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 3.45 கோடி ருபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம் (Penalty)
முக கவசம் அணியாமல் இருந்ததால் 1 லட்சத்து 64 ஆயிரத்து 329 நபர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 1910 நபர்கள், 1552 இடங்களில் தேவையின்றி கூடுதல் போன்ற விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வழக்குகள் (Cases)
இதுத்தவிர, 254 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 96 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை மாநகரில் முக கவசம் அணியாதவர், மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறியதற்காக 43 ஆயிரத்து 417 நபர்களிடமிருந்து 86 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது.
போலீஸார் வேண்டுகோள் (Police request)
வடக்கு மண்டலத்தில் 40 ஆயிரத்து 148 நபர்களிடமிருந்து 83 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது. எனவே அபராதம் செலுத்துவதைத் தவிர்க்க ஏதுவாகப், பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களுக்கு முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம், அண்மையில் ரூ.200ல் இருந்து ரூ500 ஆக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...