நாடு முழுவதும் சமையல் சிலிண்டர் விலை, ஒரே மாதத்தில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிலிண்டர் விலையில் மாற்றம் (Changes in Cylinder price)
சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் சமையல் சிலிண்டர் விலையும் அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 சமையல் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும்.
ரூ.100 உயர்வு (Rs.100 Hike)
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (Indian oil Corporation)இண்டேன், இந்தியா முழுவதும் தினந்தோறும் 30 லட்சம் சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர்1ம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், 15ம் தேதி முதல் மேலும் ரூ.50 உயர்த்தப்படுவதாக இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் இந்த மாதத்தில், சிலிண்டர் விலை 2-வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆக இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் சிலிண்டர் விலை ரூ.100 உயர்ந்துள்ளது. சென்னையில் சமையல் சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.710-க்கு விற்கப்பட உள்ளது.இது இல்லத்தரசிகளை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.
இல்லத்தரசிகள் அதிருப்தி (Housewives Dissatisfied)
இதுகுறித்து இல்லத்தரசிகள் ஆதங்கத்துடன் கூறியதாவது:-
சிலிண்டர் விலை கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் ஒரேடியாக இப்படி அதிகமாக சிலிண்டர் விலை உயர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதம் தொடங்கி 15 நாட்களிலேயே மீண்டும் கியாஸ் சிலிண்டர் விலை உயரும் என்பதை எதிர்பார்க்கவே இல்லை. இது ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினரை வெகுவாகவே பாதிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏற்கனவே பழைய விலையிலேயே அதாவது ரூ.660-க்கே சிலிண்டரை முன்பதிவு செய்திருந்தாலும், தற்போது புதிய விலையிலேயே அதாவது ரூ.710-க்கே சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகிறது.
மேலும் படிக்க...
1.5 கோடி விலை நிர்ணயிக்கப்பட்ட விநோதமான ஆடு! அசர வைக்கும் வசீகரம்!
ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யக் காலக்கெடு- முழு விபரம்!
ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியது! - டெல்லியில் குவிந்த விவசாயிகள்!