வீடுகளில் பயன்படுத்தப்படும், சமையல் எரிவாயு உபயோக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்து 1000 ரூபாயைத் தாண்டியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையில் கணிசமாக உயரும் ஆபத்து உருவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு பெட்ரோல் டீசல் விலையை தினமும் மாற்றி அமைப்பது போல் சிலிண்டர் விலையின் நிலவரத்தையும் மாதம் ஒரு முறை மாற்றி அமைத்து வருகிறது.
ரூ.1,015
அதன்படி, வீடுகளில் சமையலுருக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் நேற்று வரை ரூ. 965க்கு விற்பனையானது. இந்நிலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளையில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
முன்னதாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த மார்ச் மாதம் ரூ.50 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, பொதுமக்களிடையே மத்திய அரசின் மீது அதிருப்தியைப் பதிவு செய்யத் தவறுவதில்லை என்பதே உண்மை.
மேலும் படிக்க...
இனி இவர்களுக்கு சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்- விபரம் உள்ளே!
ரத்தத்தில் சர்க்கரைக் கட்டுப்படுப்படுத்தும் வெண்டைக்காய் வாட்டர்!