பண்டிகை சீசனால் சமையல் காஸ் சிலிண்டருக்கு தேவை அதிகரித்துள்ளதால், ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'டெலிவரி' செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஸ் சிலிண்டர் (Gas Cylinder)
பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழகத்தில், 2.38 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சிலிண்டர் வேண்டி பதிவு செய்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், சிலிண்டர் டெலிவரி செய்யப்படுவதில்லை. நேற்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, விஜயதசமி, ஆயுதபூஜை, தீபாவளி என, ஹிந்து பண்டிகைகள் வர உள்ளன. இதனால், வீடுகளில் சமையல் காஸ் பயன்பாடு அதிகம் இருக்கும்.
மேலும், பண்டிகை நாட்களில் சிலிண்டர் டெலிவரியும் செய்வதில்லை. எனவே, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிலிண்டர் டெலிவரி செய்யுமாறு, எண்ணெய் நிறுவனங்களுக்கு, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க