தமிழத்தில் வரவிருக்கும் தேர்தையொட்டி, அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதியில் வங்கி கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்பதால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன்கள் வழங்குவது திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெருங்கி வரும் தேர்தல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் முழுவீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் மற்றும் நகை கடன் புதிதாக வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாய்மொழி உத்தரவு?
இதுபற்றி வங்கி ஊழியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆய்வு கூட்டத்தின் போது, அதிகாரிகள் தரப்பில் வாய்மொழியாக, புதிதாக பயிர்க்கடன் மற்றும் நகைக் கடன் தர வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் நேரம் என்பதால், அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று அறிவிக்கும் சூழல் உள்ளதாக தெரிவித்தனர். இந்த சமயத்தில் பயிர்க்கடன், நகை கடன் வழங்கி, தள்ளுபடி செய்யும் நிலைமை ஏற்பட்டால், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலைமை சிக்கலாகி விடும்'' என்றும் தெரிவித்தனர்.
கவலையில் விவசாயிகள்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசிகள் பெரும்பாலும் கூட்டுறவு கடன்களில் பயிர் கடன் பெற்றே விவசாயம் செய்து வருகின்றனர். அப்பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் அதிகப்பட்சமாக ரூ. 3 லட்சம் வரையும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 10.50 சதவீத வட்டியில் நகைக்கடன் வழங்கப்படுகின்றது. தற்போது அவ்வகை கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்கள் அவசர விவசாய தேவைகளுக்கு தனியார் வங்கிகள் மற்றும் அடகுக்கடைகளில் கூடுதல் வட்டிக்கு கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...
Budget 2021 Mobile App : பட்ஜெட் தொடர்பான அனைத்து விவரங்களும் உங்கள் கைகளில்!
வேளாண் பல்கலைக்கழத்தில் 21 காலிப் பணியிடங்கள்! - உடனே விண்ணப்பிக்க... முழு விபரம் உள்ளே!
வேலையில்லாதவருக்கு அரசின் உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31