கொரோனா மூன்றாவது அலை இந்த மாத இறுதியில் உச்சம் தொடும் எனவும், அப்போது நாடு முழுதும் நாள் ஒன்றுக்கு 4 - 8 லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாவர்' என, ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
ஓயாத ஒமிக்ரான் (Non-stop Omicron)
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான், நுழைந்த ஒரு மாதத்திலேயே 100க்கும் மேற்பட்ட நாடுகளைப் பதறச் செய்தது. அந்த வரிசையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவல், மக்களை அச்சத்தின் பிடியில் சிக்க வைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை ஒருபுறம், பாதிப்புகளின் உச்சம் மறுபுறம் என மக்கள் செய்வது அறியாமல் திகைத்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் (Thousands)
இந்நிலையில் ஒமிக்ரான் வருகைக்குப் பிறகு, கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்தது. கடந்த சில நாட்களாக தினமும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது.
நாளுக்கு நாள் தினசரி பாதிப்பு ஆயிரங்களைக் கடந்துவருவதால், மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கணித சூத்திரம் கொரோனா தொற்றுப் பரவலில் முந்தைய அலைகளின் பாதிப்பு தீவிரத்தை கணித சூத்திரத்தின் அடிப்படையில் கணித ஆய்வாளர் மணிந்தர் அகர்வால் கணித்து வருகிறார். உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பேராசிரியரான இவர், மத்திய அரசின் உதவியுடன் இந்த பணியை செய்து வருகிறார்.
உச்சம் தொடும் (Touching the peak)
மூன்றாவது அலை குறித்து இவர் கூறியதாவது: மூன்றாவது அலையை ஏற்கனவே சந்தித்து வரும் மும்பை மற்றும் டெல்லி நகரங்களில் இம்மாத மத்தியில் தொற்று பரவல் உச்சம் தொடும்.
டெல்லியில் நாள் ஒன்றுக்கு 50 - 60 ஆயிரம் பேருக்கும், மும்பையில் 30 ஆயிரம் பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படும்.இந்த மாத இறுதியில் நாடு முழுதும் மூன்றாவது அலை உச்சம் தொடும்.
8 லட்சம் பேர் (8 lakh people)
அப்போது நாள் ஒன்றுக்கு 4 - 8 லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாவர். ஐந்து மாநில சட்டசபை தேர்தல் அலை தொற்று பரவும் விதத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
தேர்தல் பிரசாரங்கள் 3-வது அலை வேகமாகப் பரவக் காரணமான பல விஷயங்களில் தேர்தல் பிரசாரங்கள் ஒன்றாக இருக்கும். அதை மட்டும் நீக்குவதால் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்திவிட முடியாது.
இவ்வாறு பேராசிரியர் கூறினார்.
மேலும் படிக்க...
முழு ஊரடங்கு அமல்- சென்னையில் பஸ், ஆட்டோ, மெட்ரோ ரயில்கள் ஓடாது!