கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலைகாரக் கொரோனா (The killer corona)
2019-ம் ஆண்டு கடைசியில் சீனாவி வூகானில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் பெரும் உயிரிழப்பையும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியது.
2,3-வது அலை
சீனாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா என பல நாடுகளுக்கும் வேகமாகப் பரவியக் கொரோனா வைரஸ், இந்தஆண்டு 2வது அலையாக மாறி லட்சக்கணக்கானோரை பலிவாங்கியது. இதைத்தொடர்ந்து 3வது அலை அக்டோபர் மாதத்தில் உருவாகி, குறிப்பாகக் குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
மீண்டும் கொரோனா (Corona again)
இதையடுத்து 3-வது அலையை எதிர்கொள்ள அரசுகளும் தயாராகி வந்தன.
இருப்பினும் தற்போது சில நாடுகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று ஏற்படாத நிலையில் சீனாவில் வடக்கு, வடமேற்கு உள்ளிட்ட 5 மாகாணங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
விமான சேவை நிறுத்தம் (Air service suspension)
தலைநகர் பீஜிங் நகரில் பெருமளவு பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க...
ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது- 25ம் தேதி வழங்கப்படுகிறது!