இந்தியாவின் முதல் கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளான ஒரு பெண் மருத்துவருக்கு, மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஜூலை 14 அன்று கேரளாவின் திருச்சூரில் தெரிவித்தனர். அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரது RT-PCR பரிசோதனை நேர்மறையாக வந்துள்ளது, ஆன்டிஜென் பரிசோதனை நெகடிவ் என்று வந்துள்ளது. அவரில் அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என்று திருச்சூர் DMO டாக்டர் கே.ஜே. ரீனா PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
படிப்பு காரணங்களுக்காக டெல்லி செல்ல தயாராக இருந்ததால் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது RT-PCR பரிசோதனை நேர்மறையாக வந்துள்ளது. அந்தப் பெண்மணி தற்போது வீட்டில் இருக்கிறார், அவரது உடல் நிலை தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
ஜனவரி 30,2020 ஆம் தேதி தான் வுஹான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானது, செமஸ்டர் விடுமுறையைத் தொடர்ந்து வீடு திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு அவர், நாட்டின் முதல் கொரோனா நோயாளி ஆனார்.
திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து பிப்ரவரி 20, 2020 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
மேலும் படிக்க:
அரசு தரும் ரேஷன் பொருட்களை வாங்குவதில் சிரமமா? இதை செய்யுங்கள்
வேளாண்,உணவுத்துறை அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டலின் அதிரடி உத்தரவு!!