கோவிட் வைரஸ் (Covid Virus) சாதாரண ஜலதோஷ வைரஸ் போல் மாறிவிடும்; ஆனால் அதற்கு நீண்ட காலம் ஆகும்' என, இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கிராண்ட் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகள்
டில்லியில் நடைபெற்ற மாநாட்டில், இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கிராண்ட் பங்கேற்று தெரிவித்து உள்ளதாவது: கோவிட் வைரஸ் தொடர்பாக இன்னும் நாம் நிறைய புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதற்கு எதிராக தடுப்பூசிகள் (Vaccine) செலுத்தப்பட்டு வந்தாலும், இன்னும் அது பெருந்தொற்றாகத்தான் தொடர்கிறது.
சாதாரண ஜலதோஷ வைரஸ்
அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்திய அமெரிக்காவில் தற்போதும், கோவிட் வைரசால் வாரத்துக்கு 53 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகிறார்கள். இதை விட ஐரோப்பாவின் நிலை மோசமாக இருக்கிறது; அங்கு வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.ஆனால், கோவிட் வைரஸ் சாதாரண ஜலதோஷ வைரஸ் (Cold Virus) போல் மாறிவிடும். ஆனால் அதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க
மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்: அக்டோபர் 10-இல் நடைபெறவிருக்கிறது
பருவ கால தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது தேங்காய்ப்பூ