தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 4,506பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 113 பேர் உயிரிழந்துள்ளனர். 5,537 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருவது ஆறுதல் தருகிறது.
கொரோனா தொற்று விபரம்
இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 62,622 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 4,506பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,79,696 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,28,38,250 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
குறையும் கொரோனா பாதிப்பு
இன்று கொரோனா உறுதியானவர்களில் 2,466பேர் ஆண்கள், 2,040 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,49,510 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,30,148 ஆகவும் அதிகரித்து உள்ளது. 5,537பேர் கொரோனாடில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,08,886ஆக உயர்ந்துள்ளது.
113 பேர் பலி
113 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 34பேர் தனியார் மருத்துவமனையிலும், 79 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,619 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க...
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!
தலைநகர் டெல்லியில் அதிர்ச்சி! 5 கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பட்ட புதிய அறிகுறி!!
பாலிடெக்னிக் கல்லூரி, மாணவர் சேர்க்கை- அரசாணை வெளியீடு