மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான புதிய பாதிப்புகளில், 85.6 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 24 மணி நேரத்தில், 23,285 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14,317 பேருக்கும், கேரளாவில் 2,133 பேருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது, நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 1,97,237 ஆக உள்ளது.
நேற்று வரை 2.61 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 60 வயதுக்கு மேற்பட்ட 60,61,034 பயனாளிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
55-வது நாளான நேற்று 4,80,740 தடுப்பூசிகள் போடப்பட்டன. நேற்று மகா சிவராத்திரையை முன்னிட்டு பலர் விரதம் இருந்ததால், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தது.
கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 1.09 கோடிக்கும் அதிகமானோர் குணடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 15,157 நோயாளிகள் குணமடைந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 117 பேர், கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.