வெளிமாநிலத்தவர்கள், இனி வரும் காலங்களில், தமிழகத்திற்கு வர, கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிப்பு
இந்தியாவின் பல மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடியக் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக அதன் தாக்கம் தமிழக மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்திருந்தது.
பரிசோதனை சான்றிதழ்
இதுவரை, விமானப் பயணம் மேற்கொள்பவர்கள், பயணத்திற்கு முன்னதாக 72 மணி நேரத்திற்குள் செய்த கொரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு வர வேண்டும். கொரோனாத் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் 'நெகடிவ்' சான்றிதழை கொண்டு வருவதை தமிழக அரசு கட்டாயப்படுத்தி இருந்தது.
இதனிடையே அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையின் பயனாகத் தற்போது, அனுதினக் கொரோனா வைரஸ் தொற்று ஆயிரத்திற்கும் கீழேக் குறைந்துள்ளது.
அவசியமில்லை (Not necessarily)
இதையடுத்து, கேரளாவைத் தவிர, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள், கொரோனா சான்றிதழையோ அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழையோ கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. ஆனால், தமிழகத்திற்கு வருவதற்காக இ - பதிவு செய்திருக்க வேண்டும்.
இ- பதிவு வேண்டாம் (Do not e-register)
இ-பதிவு புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி பாதுகாப்பே (Vaccine protection)
கொரோனா தொற்றுப் பரவல் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், தமிழக அரசு தற்போது, விமானப் பயணத்திற்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. தடுப்பூசி பாதுகாப்புப் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.
மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி போடவில்லையா? - இனி ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது!
புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!