தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் தினசரி பாதிப்பும், பலி எண்ணிக்கையும், முழு ஊரடங்கை அமல்படுத்தி, வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார இழப்பு (Economic loss)
உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த 2 ஆண்டுகளாக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
இதனால் தனிமனிதர்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை, கொரோனா வைரஸ் பரவல், 3வது அலையாகப் படுவேகமாகப் பரவி வருகிறது.
ஊரடங்கு (Curfew)
நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு உள்ளிட்டப் பல்வேறுக் கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு படுவேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்றையத் தொற்று பாதிப்பு 29,870 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,870 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்து 72 ஆயிரத்து 666 ஆக உயர்ந்துள்ளது.
33 பேர் பலி (33 killed)
கொரோனா தொற்று பாதிப்புக்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 37,145 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 7,038 ஆக உள்ளது. கொரோனா தொற்றுக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஜனவரி 20ம் தேதி 7520 ஆக இருந்த பாதிப்பு 7,038 ஆக குறைந்துள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
10 நாட்கள் தனிமைப்படுத்துதல் போதாது - புதிய ஆய்வில் தகவல்!
கொரோனா 3வது அலை எப்போது Endcard போடும்? நிபுணர்கள் விளக்கம்!