தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முன்எப்போதும் இல்லாத அளவாக 21 ஆயிரத்தை நெருங்கியிருப்பதால், முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
3-வது அலை
கொரோனா வைரஸின் 3-வது அலை, ஆழத்தில் அழுத்தமாக நங்கூரம் போட்டதுபோலக் குறிப்பாக யாரும் எதிர்பார்க்காத வகையில், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.
இந்த நிலைத் தொடர்ந்தால், தமிழகம் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் மாநிலமாக மாறும் சூழல் உருவாகும். அந்த வரிசையில், ஜனவரி 13ம் தேதி யின் தினசரி கொரோனா பாதிப்பு 20,911 ஆக அதிகரித்துள்ளது.
பலி எண்ணிக்கை (Number of victims)
25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 13 பேரும் , அரசு மருத்துவமனையில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,930 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
20,911
தமிழகத்தில் 1,56,402 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 20,886 பேர், வங்கதேசத்திற்கு சென்று திரும்பிவர்கள் 3 பேர் மற்றும் மேற்குவங்கம் 6, கர்நாடகா 5, அசாம் 4, கேரளா 3, ஆந்திரா, பீஹார், ராஜஸ்தான் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என மொத்தம் 20,911 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,68,500 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,91,11,153 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. ஜனவரி 13ம் தேதி கோவிட் உறுதியானவர்களில் 12,350 பேர் ஆண்கள், 8,561 பேர் பெண்கள். 6,235 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். இதனால் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,27,960 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை, ஜனவரி 12ம் தேதி 7,372 ஆக இருந்த நிலையில் ஜனவரி 13 ம் தேதி 8,218 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க...
ஒரு லிட்டர் பெட்ரோலில் 102 km வரை செல்ல கூடிய 3 சூப்பர் பைக்குகள்