உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு நாள் நோய் தொற்றின் அளவு குறைந்து வருகிறது.
ஜூலை ஐந்தாம் தேதியன்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 4000க்கும் குறைவாக பதிவானது. இந்திய அளவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் கீழே பதிவானது.
தமிழகத்தில் 1,54,058 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது . அதில் 3715 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவியுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 4,029 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இன்று 12 வயதுக்கு உட்பட்ட 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 54 பேர் இறந்துள்ளனர். இணைநோய்கள் இல்லாத 8 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றால் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,059 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மேலும் 214 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . கோவையில் 436 பெருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 25,00,002 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதில் 33,059 பேர் இறந்துள்ளனர். தற்போது 34, 926 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,32,017ஆக அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க:
தலைநகர் டெல்லியில் அதிர்ச்சி! 5 கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பட்ட புதிய அறிகுறி.
சுயவேலைவாய்ப்பு திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்: ஸ்டாலின் அறிவுறுத்தல்!
மின் விபத்துக்களை தடுக்கும் உயிர் காக்கும் சாதனத்தை வீடுகளில் பொருத்த உத்தரவு!