News

Thursday, 22 July 2021 07:13 PM , by: R. Balakrishnan

Credit : Dinamalar

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்பை தவிர்க்க முடியாது என, உலக சுகாதார நிறுவன தலைவர், டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டி

தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த, ஜப்பான் தலைநகர், டோக்கியோவில், ஆக.,8ல் ஒலிம்பிக் போட்டி (Olympic Games) துவங்குகிறது. இதையொட்டி, உலக நாடுகளின் விளையாட்டு வீரர்கள், டோக்கியோவிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில்,சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டத்தில், டெட்ராஸ் அதனோம் பேசியதாவது: கொரோனா பாதிப்பு புள்ளி விபரத்தின் மூலம், ஒலிம்பிக் போட்டியில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. வைரஸ் பிரச்னையை முற்றிலும் ஒழிப்பதென்பது முடியாத காரியம்.

இந்த பிரச்னைக்கு இடையிலும் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. 'ரிஸ்க்' எடுக்காமல் வாழ்க்கை இல்லை. ஒலிம்பிக் போட்டியின் வெற்றி என்பது, ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதில் அடங்கியுள்ளது. இதற்கு, பல கட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும். இதன்மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம்.

தடுப்பூசி

உலகில் வழங்கப்பட்ட தடுப்பூசியில் (Vaccine), 75 சதவீதத்தை 10 நாடுகள் மட்டுமே பங்கு போட்டுக் கொண்டுள்ளன. இது, அநியாயம். உலகில் தாங்கள் வசிக்கும் பகுதியில் வைரஸ் ஒழிந்து விட்டதாக கருதுவோர், முட்டாள்களின் சொர்க்கத்தில் வசிக்கின்றனர் என்றுதான் கூற வேண்டும் என்று அவர் பேசினார்.

மேலும் படிக்க

40 கோடி பேருக்கு கொரோனா ஆபத்து: ICMR ஆய்வில் தகவல்!

போராட்ட களத்தை மாற்றினர் விவசாயிகள்: ஜந்தர் மந்தரில் தீவிர போலீஸ் பாதுகாப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)