News

Friday, 14 May 2021 07:50 AM , by: Elavarse Sivakumar

Credit : Dinamalar

தமிழக அரசு சார்பில் கோதுமை, ரவை, பருப்புகள் அடங்கியக் கொரோனா நிவாரணத் தொகுப்பாக13 வகை மளிகைப் பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனாக் கோரத்தாண்டவம் (Corona claim)

உயிர்க்கொல்லியான கொடூரக் கொரோனா தற்போது இந்தியாவில் 2வது அலையாகப் பரவி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு, நூற்றுக்கணக்கானோர் பலி என இந்த வைரஸின் கோரத்தாண்டவம் உச்சத்தை எட்டி வருகிறது.

அடுத்தடுத்து நடவடிக்கை (Subsequent action)

தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனாத் தொற்றுப் பரவலில் இருந்து மக்களைப் பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு போர்க்கால அடிப்படையில், அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தளர்வுகளுடன் முழு ஊரடங்கு (Full curfew with relaxations)

இதன் ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் வியாபாரிகள் மற்றும் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிதியுதவி (Funding)

ஊரடங்கு நெருக்கடியால் ஏற்படும் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ள ஏதுவாக அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.4,000 வழங்கும் திட்டத்தையும் அரசு அமல்படுத்தியுள்ளது.
இதில் முதல் தவணையான ரூ.2,000 வழங்கும் பணி மே 15ம் தேதி முதல் தொடங்குகிறது.

13 பொருட்கள் (13 Items)

இதன் தொடர்ச்சியாக சுமார் 2.11 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 13 வகை மளிகை பொருட்கள் அடங்கியத் தொகுப்பை கொரோனா நிவாரணமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.இத்திட்டம் வரும் ஜூன் மாதம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று முதல் செயல்படுத்தப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மளிகைப் பொருட்கள் (Groceries)

இதில், சர்க்கரை, கோதுமை, ரவை, உப்பு,கடலைப் பருப்பு, உளுந்தம்பருப்பு, புளி, மஞ்சள்பொடி, சீரகம், மிளகாய் பொடி, குளியல் சோப் மற்றும் துணி துவைக்கும் சோப்பு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் எனக் கூறப்படுகிறது.

மக்கள் வரவேற்பு (People welcome)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களிடையே திமுக அரசின் அதிரடி நடவடிக்கைகள் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் படிக்க....

தடுப்பூசியும் செயல் இழக்கலாம்! எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்!

கொரோனா சிகிச்சைக்கு உதவுகிறது பசுவின் பால்!

அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)