News

Friday, 07 May 2021 01:47 PM , by: Elavarse Sivakumar

Credit : Dailythanthi

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற, மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு முதல் கையெழுத்திட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் (Legislative election)

234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டப்பேரவைக்குக் கடந்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

தனிப் பெரும்பான்மை (The absolute majority)

இதில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றிக்கனியைப் பறித்தது. தி.மு.க. 125 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை பலத்தைப் பெற்றது.

முதலமைச்சராகப் பதவியேற்பு (Inauguration as Chief Minister)

இதையடுத்து தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

நினைவிடங்களில் மரியாதை (Respect in memorials)

மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் மரியாதை செலுத்தி விட்டு அதன்பின்னர் கோட்டைக்குச் சென்று தனது பணிகளைத் தொடங்கினார்.

முதல் கையெழுத்து (The first signature)

அங்கு முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளைத் தொடங்கினார். முதல் பணியாக, 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

அப்போது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார். இது 2 தவணைகளாக வழங்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 2 ஆயிரம் ரூபாயை மே மாதத்திலேயே வழங்கும் உத்தரவில் இன்று கையெழுத்திட்டுள்ளார்.

பால்விலைக் குறைப்பு (Milk price reduction)

ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் 16ம் தேதி முதல் குறைத்து விற்பனை செய்வதற்கான அரசாணையில் கையெழுத்திட்டார்.

பெண்களுக்கு இலவசம் (Free for women)

சாதாரணக் கட்டண, நகர பேருந்துகளில் பெண்கள் நாளை முதல் இலவசமாகப் பயணம் மேற்கொள்வதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார்.

காப்பீடுக் கட்டணம் (Insurance premium)

இதே போல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வழங்குவதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார்.

புகார் மனுக்களுக்குத் தீர்வு

இதேபோல் புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண புதிய துறை தொடர்பான கோப்பிலும் முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.

மேலும் படிக்க....

முத்துவேல்.கருணாநிதி.ஸ்டாலின் என்னும் நான்- முதலமைச்சராக பதவியேற்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி! 5 முனை போட்டியில் வென்று, 6 வது முறைய திமுக ஆட்சி!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சரிந்த சினிமா நட்சத்திரங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)