News

Wednesday, 21 July 2021 09:45 AM , by: R. Balakrishnan

Credit : Dinamalar

நாட்டின் மக்கள் தொகையில் 40 கோடி பேரை எளிதாக கொரோனா தொற்ற வாய்ப்புள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) மக்கள் உடலில் உருவாகி உள்ளதா என்பதை அறிய 'செரோ டெஸ்ட்' எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் பரிசோதனையை ஐ.சி.எம்.ஆர். (ICMR) எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செய்து வருகிறது.

செரோ டெஸ்ட்

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 975 பொது மக்களிடமும் 7252 சுகாதார பணியாளர்களிடமும் மூன்று கட்டங்களாக இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஜூன் - ஜூலையில் 21 மாநிலங்களைச் சேர்ந்த 70 மாவட்டங்களில் நான்காவது கட்ட 'செரோ டெஸ்ட்' மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை குறித்து ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் மக்கள் தொகையில் 6 வயதுக்கு மேற்பட்ட மூன்றில் இரண்டு பங்கினர் அல்லது 68 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை. எனவே 40 கோடி மக்கள் எளிதில் தொற்று பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கேற்ற 85 சதவீத சுகாதாரப் பணியாளர்களின் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. சுகாதாரப் பணியாளர்களில் 10ல் ஒருவர் தடுப்பூசி (Vaccine) போடாதவராக உள்ளார். சமூக, ஆன்மிக, அரசியல் கூட்டங்கள், தேவையற்ற பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பயணங்கள் மேற்கொள்ளலாம்.

குழந்தைகள் உடலில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே கல்வி பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டதும் பள்ளிகளை திறக்க முடிவு செய்யும்போது முதலில் ஆரம்ப பள்ளிகளை திறப்பதே சிறந்தது. மூன்றில் இரண்டு பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதால் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்ட கூடாது.

மேலும் படிக்க

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு மாறும்: முதல்வர் உறுதி!

இந்தியாவில் எக்ட்ரிக் பஸ்ஸை இயக்க சென்னை உள்பட 9 நகரங்கள் தேர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)