தென்கிழக்கு ஆசிய நாடுகளில், கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி வருவதால், அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கவனமாக இருக்கும்படி, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், அண்டை நாடுகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால், அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இந்நிலையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு களுக்கும், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் நேற்று அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில், கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆலோசனைக் கூட்டம் (Consultative meeting)
இதையடுத்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம், கடந்த 16ல் நடந்தது. அதில், கொரோனா பரவலை துவக்கத்திலேயே தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனைகள் செய்வது, பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, தடுப்பூசி செலுத்துவது ஆகியவற்றில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
பரிசோதனை
காய்ச்சல், சுவாச பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை மீண்டும் துவங்கும் அதே வேளையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியதும் அவசியம்.
மரபணு மாறிய கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யும், 'இன்சாகாக்' அமைப்பிற்கு, தேவையான அளவுக்கு மாதிரிகள் அனுப்பப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதை செய்தால் தான், புதிய வகை வைரஸ்களை விரைந்து கண்டறிய முடியும்.
மேலும் படிக்க
இந்திய தடுப்பூசி இயக்கம் மக்களால் நடத்தப்படுகிறது: பிரதமர் பெருமிதம்!
சீனாவைத் தொடர்ந்து ஜெர்மனியிலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!