News

Tuesday, 07 September 2021 08:21 AM , by: R. Balakrishnan

Oxygen Production

கோவிட் மூன்றாவது அலை இந்தியாவில் பரவ உள்ளதாக ஐசிஎம்ஆர் (ICMR) விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் சிலிண்டர்களை (Oxygen Cylinder) தயாரிக்க இந்தியா அரசு முடிவெடுத்துள்ளது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதிலிருந்தே ஆக்ஸிஜன் தயாரிப்பு பணிகளை துரிதப்படுத்தினால் தான் இலக்கை எட்ட முடியும் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆக்ஸிஜன் தயாரிப்பு

லிண்டே இந்தியா நிறுவனம் இந்திய ஆக்ஸிஜன் தயாரிப்பில் மூன்றில் ஒரு பங்கு ஆக்ஸிஜனை தயாரிக்க மத்திய அரசுடன் ஒப்பந்தம் இட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுடன் இதற்காக லிண்டே நிறுவனம் தொடர்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அரசு மருத்துவமனையில் தயாராக இருக்கும் பட்சத்தில் வயோதிகர்கள் பலரது உயிரைக் காக்கமுடியும். மேலும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவரும் தடுப்பூசி போடுங்கள்

பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள வேண்டுகோள்: மாணவர்களின் கல்வி மற்றும் உளவியல் நலனுக்காக, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதை பெற்றோரும், ஆசிரியர்களும் உணர்ந்து, அனைவரும் முக கவசம் (Mask) அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், இதர பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவிட வேண்டும்.

மேலும் படிக்க

செப்டம்பர் 15 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடு நீட்டிப்பு

கர்நாடகாவில் சொதப்பல்: சில நிமிடங்களில் இளைஞருக்கு 2 முறை தடுப்பூசி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)