தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு சுகாதாரத்துறைக்கு அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது. குறிப்பாக மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை இறுதிக்கட்டத்தில் இருந்த நிலையில், மீண்டும் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது 4-வது அலைக்கான அறிகுறியாக இருக்குமோ? என்ற அச்சம் மக்களிடையேப் பரவி உள்ளது. குறிப்பாகத் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் மீண்டும் தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.
தற்போது மேலும் 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 37- பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. இதுவரை மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,025- ஆக உள்ளது. இருப்பினும் கொரோனாக் கட்டுப்பாட்டில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
முகக்கவசம் (Mask)
-
அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மருத்துவம் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
-
மேலும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் மாணவர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
-
அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும்.
-
மருத்துவம் மற்றும் செவிலிய படிப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
-
அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகளை மறுகட்டமைப்பு செய்வதுடன் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் வசதிகள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
-
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும்.
-
இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு பயிலும் மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க...
வாட்டும் வெயிலிலும் உடலைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள வேண்டுமா?