Corona Vaccination compulsory
பள்ளிகளில் படிக்கும்15 முதல் 18 வயது உடைய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டு உள்ளது.
ஒமைக்ரான் கொரோனா பரவலால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், இன்று (பிப்ரவரி 1) முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் துவங்குகின்றன. இந்நிலையில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தடுப்பூசி கட்டாயம் (Must Vaccinated)
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிக்கு வரக்கூடிய 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக தனிமைப்படுத்துவதுடன், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
பள்ளி வளாகத்தில், மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். கிருமி நாசினியால் பள்ளி வகுப்பறைகளை தினசரி சுத்தம் செய்வது அவசியம்.கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள மாணவர்கள், பள்ளிக்கு வருவதை தவிர்க்க வலியுறுத்துவதுடன், மாணவர்கள் தொடர்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
முன்னெச்சரிக்கை (Precautions)
உணவருந்தும் இடங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மாணவர்களுக்கு நோய் பரவல் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க