இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை, நேற்று 48 கோடியைக் கடந்துள்ளது.
இன்று காலை 7:00 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 56,83,682 முகாம்களில் 48,52,86,570 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 62,53,741 தடுப்பூசிகள் (Vaccine) செலுத்தப்பட்டு உள்ளன.
97.37% பேர் நலம்
இந்தியாவில் இதுவரை 3,09,33,022 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 36,668 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் 97.37 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து 38 நாள்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,10,353 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.29 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 18,47,518 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 47,31,42,307 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
மேலும் படிக்க
எச்சரிக்கை: அக்டோபரில் உச்சம் அடைகிறது கொரோனா 3வது அலை
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி பெற இணையதளம் அறிமுகம்!