உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன. மருந்து இல்லை என்பதாலேயே, வைரஸ் தொற்று பரவலும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டிவிட்டது.
அதேநேரத்தில், இந்த வைரஸிற்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
தடுப்பூசி கண்டுபிடிப்பு (Vaccine for corona)
இந்நிலையில் இந்தியாவின் புனே நகரைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான கோவேக்சின் (COVAXIN) என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Medical Research Council) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ள இந்த மருந்து பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சோதனை வெற்றி பெற்றதால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மனிதர்களுக்கு சோதனை (Test on Humans)
கோவேக்சின் தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது.மேலும் கோவேக்சின் தடுப்பூசி, ஜூலை மாதம், நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. இந்த மருத்துவ பரிசோதனைகளைச் செய்வதற்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இது குறித்து பாரத் பயோடெக் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எலா கூறுகையில், ‛முதற்கட்ட ஆய்வுகளின் முடிவுகள் நம்பிக்கைக்குரியவையாக இருக்கின்றன. மேலும் சோதனை முடிவுகள் விரிவான பாதுகாப்பு மற்றும் பயனுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை காட்டுகின்றன என்றார்.
Elavarase Sivakumar
Krishi Jagran
ஆரோக்கியம் முதல் அழகு வரை அனைத்திற்கும் தேன்!!
தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை மீண்டும் ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு!