பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 7 April, 2021 7:27 AM IST
Credit: Scientific American

கொரோனா பரவலைத் தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, இந்திய மருத்துவ கூட்டமைப்பு (IMA) கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த ஆண்டு பரவியதைவிட அதிக வீரியம் மிக்கது இந்த புதிய வடிவக் கொரோனா என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அச்சம் இல்லை (No fear)

இருப்பினும் மக்களிடையே அந்த பழைய அச்சம் இல்லை. பாதுகாப்பு கவசங்களை அணிவதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை. ஏனெனில் தடுப்பூசி வந்துவிட்டதுதானே என நினைக்கிறார்கள்.

தப்பிக்க வழி (The way to escape)

இருப்பினும், போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாண்டால், நோயில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள இயலும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

IMA கடிதம் (Letter)

கொரோனாத் தடுப்பூசியைப் பொருத்தவரை, 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் போட்டுக்கொள்ளலாம் என்பதே இப்போதைய அறிவுறுத்தலாக உள்ளது. இந்நிலையில் இந்திய மருத்துவக் கூட்டமைப்பான (IMA) பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால், கொரோனா 2வது அலை வேகமாகப் பரவி வருகிறது.

போர்க்கால நடவடிக்கை (Wartime action)

இதனால், தடுப்பூசி செலுத்தும் முறையைப் போர்க்கால அடிப்படையில் வேகப்படுத்த வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு (For those over 18 years of age)

ஆதலால் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனாத் தடுப்பூசியைச் செலுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவரும் இலவசமாக கொரோனாத் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தனியார் மருத்துவமனை, சிறிய கிளினிக் போன்றவற்றையும் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும்.

சான்றிதழ் கட்டாயம் (Certification is mandatory)

பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் மக்கள் தடுப்பூசி சான்றிதழைக் கொண்டு வருவதைக் கட்டாயமாக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தனி நபர்களுக்கு நோய் எதிர்ப்பு அதிகரிப்பதுடன் , நோயின் தீவிரத்தை குறைக்கும்.

நேர்மறை விளைவுகள் (Negative effects)

அனைத்து விதமான மருத்துவர்கள், கிளினிக் நடத்தும் மருத்துவர்களையும் தடுப்பூசி செலுத்துவதில் ஈடுபடுத்தினால், நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

மீண்டும் ஊரடங்கு (Curfew again)

கொரோனாத் தொற்று சங்கிலியை உடைக்க உயர்ந்து வரும் பாதிப்பைத் தடுக்க, குறிப்பிட்ட நேரத்திற்கு தொடர்ந்து ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்.

தடை வேண்டும் (To be banned)

திரையரங்குகள், கலாசார, மதரீதியான வழிபாடுகள், விளையாட்டுப் போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க...

கொரோனாப் பரவலைத் தடுக்கக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்- தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

7.3 கோடிக்கும் அதிகமானோருக்கு Covid தடுப்பூசி!

English Summary: Corona vaccine is required for people over 18 years of age - IMA recommendation!
Published on: 07 April 2021, 07:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now