News

Monday, 18 January 2021 09:30 AM , by: Daisy Rose Mary

கொரோனா தொற்றின் தாக்கம் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பு 2 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது, தமிழகத்தில் 244 நாட்களுக்கு பின் 600-க்கு கீழ் பாதிப்பு குறைந்துள்ளது.

இந்தியளவில், கடந்த 24 மணி நேரத்தில் 15,144 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,08,826 ஆக உள்ளது. தினசரி பாதிப்பு கடந்த 10 நாட்களாக 20,000க்கும் கீழ் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 17,170 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,01,96,885-ஆகவும், குணமடைந்தோர் வீதம் 96.58 சதவீதமாகவும் உள்ளது.

முதல் முறையாக, இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, மொத்த பாதிப்பில், 2 சதவீதத்துக்கும் குறைவாக(1.98 சதவீதம்) பதிவாகியுள்ளது.  இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், தினசரி பாதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

நாட்டில் கோவிட் தொற்றால் ஏற்படும் தினசரி உயிரிழப்பும் குறைந்து வருகிறது. கடந்த 23 நாட்களாக தினசரி உயிரிழப்பு 300க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 181 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கும் கீழ் குறைந்தது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 18-ந்தேதி கொரோனா பாதிப்பு 600-க்கும் குறைவாக இருந்தது. அதன் பிறகு, கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில் 244 நாட்களுக்கு பின்னர் ஞாயிற்றுகிழமை மீண்டும் கொரோனா பாதிப்பு 600-க்கும் கீழ் சென்றுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 51 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 353 ஆண்கள், 236 பெண்கள் என மொத்தம் 589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,30,772 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 770 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 12 ஆயிரத்து 568 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். 5 ஆயிரத்து 940 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் 12,264 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க...

குப்பைகளை மறுசுழற்சி செய்து, இயற்கை உரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம்!

கொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

கரகாட்டம் ஆடிக்கொண்டே வயலில் நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவியின் வித்தியாசமான முயற்சி!

வலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு! மீனவர்கள் செய்த சூப்பர் செயல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)