18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி விலையை குறைக்க அதனை தயாரிக்கும் சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசிவிலையை ரூ.600ல் இருந்து ரூ.225 ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டதாக அடார் பூனாவாலா கூறியுள்ளார்.
விலை குறைப்பு (Price reduced)
கோவாக்சின் தடுப்பூசி விலையும் குறைக்கப்படுவதாக, பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை இயக்குனர் சுசித்ரா கூறியுள்ளார். தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கோவாக்சின் விலை ரூ.1,200ல் இருந்து ரூ.225 ஆக குறைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து விதமான கோவிட் கட்டுப்பாடுகளும் கடந்த மார்ச் 31 உடன் முடிவுக்கு வந்தது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கமான இந்தியாவின் தடுப்பூசி திட்டம் அறிவியல் பூர்வமானது. நமது குடிமக்களை காக்கவும், கோவிட்டிற்கு எதிரான போராட்டத்தை பலப்படுத்தவும், தடுப்பூசி உருவாக்கும் பணியை 2020க்கு முன்னர் துவங்கினோம். இந்த தருணத்தில், நமது விஞ்ஞானிகள் மற்றும் தனியார் துறையினர் உயர்ந்து நிற்கும் தருணம் பாராட்டுக்குரியது.
கோவிட்டிற்கு எதிரான போராட்டத்தில் முன்களத்தில் நிற்பவர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கும் வகையில், 2021ல் டாக்டர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு வெற்றி அடைந்துள்ளது என் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க
இந்தியாவில் 4 வது அலை: மருத்துவ நிபுணர்கள் தகவல்!
முடிவுக்கு வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள்: மத்திய அரசு தகவல்!