100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடி நிலவுவதாக ரிசர்வு வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
கொரோனா தோற்று காரணமாக கடந்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 100 நாட்களுக்கும் மேலாக இந்த ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. இருப்பினும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எஸ்.பி.ஐ வங்கியின் 7-வது பொருளாதா மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய, ரிசர்வு வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் வைரஸால், கொரோனா தொற்று காரணமாக, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உற்பத்தி, சுகாதாரம்,மக்களின் நல்வாழ்வு போன்றவற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு தாக்கத்தினையும் எதிர்மறையான மாற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன் தாக்கம் நம்முடைய பொருளாதாராம் மற்றும் நிதிக் கட்டமைப்பை முறையாக்கும் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சோதனையாக இருந்து வருகிறது. தற்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் நாட்டின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன.
மேலும் கடந்த பிப்ரவரி 2019 முதல் ஒட்டுமொத்த அடிப்படையில் கொரோனா தாக்கம் தொடங்கும் வரை ரெப்போ விகிதத்தை 135 அடிப்படை புள்ளிகள் குறைத்தோம். பொருளாதார வளர்ச்சியின் மந்த நிலையை சமாளிப்பதற்காக இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேநீர்கள்- உங்கள் கவனத்திற்கு
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெந்தயக்கீரை- சாகுபடி செய்வது எப்படி?
வீடியோ மூலம் வீட்டிற்கு வந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் இ-சஞ்சீவனி திட்டம்