தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளத்தில் கொரோனாவால் இறந்தவருக்கு 6 மாதங்களுக்குப்பிறகு, கோவிட் தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தியால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தீயாகப் பரவும் கொரோனா
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் மற்றும் 2-வது அலையைக் காட்டிலும் 3- வது அலை அதி தீவிரமாகவேப் பரவி வருகிறது.
போலி சான்றிதழ் (Fake certificate)
தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 24 ஆயிரமாக இருப்பதால், மக்கள் எப்போதுமே அச்சத்தில் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், கொரோனா ஊசி போடாதவர்களுக்கும் போட்டதாக சான்றிதழை அனுப்பி அதிகாரிகள் தங்கள் அலட்சியப்போக்கை அச்சிட்டுக் காட்டுவது அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
மே மாதம் மரணம் (Death in May)
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்த வில்வமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜப்பா. 72 வயதான இவர் கடந்த ஏப்ரல் 13ல் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு மே 20ம் தேதி கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
ஏப்ரல் மாதம் முதல் டோஸ்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்த வில்வமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜப்பா. 72 வயதான இவர் கடந்த ஏப்ரல் 13ல் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தினார்.
அவர் இறந்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், ராஜப்பா, பயன்படுத்திய மொபைல்போனுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதாகக் குறுஞ்செய்தி வந்திருக்கிறது. இதைக் கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
குறுஞ்செய்தியால் அதிர்ச்சி
கோவிட்டால் இறந்தவருக்குக் கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக வந்த குறுஞ்செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
10 நாட்கள் தனிமைப்படுத்துதல் போதாது - புதிய ஆய்வில் தகவல்!
கொரோனா 3வது அலை எப்போது Endcard போடும்? நிபுணர்கள் விளக்கம்!