செல்போன் கதிர்வீச்சில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக மாட்டுச் சாண சிப் (Cow-Dung-Chip) ஒன்றை மத்திய அரசு உருவாக்கப்பட்டுள்ளது.
ராஷ்டிரிய காமதேனு ஆயோக் (Rashtriya Kamdhenu Aayog )
மத்தியில் ஆளும் பாஜக அரசின் மூத்த தலைவர்கள் பல்வேறு சமயங்களில் மாட்டுச் சாணம், கோமியம் குறித்து எடுத்துரைத்து வருகின்றனர். இந்நிலையில், ராஷ்டிரிய காமதேனு ஆயோக் (rashtriya kamdhenu aayog) என்ற அமைப்பை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பு நாடு முழுவதும் காமதேனு தீபாவளி அபியான்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
மாசற்ற தீபாவளியைக் கொண்டாடும் நோக்கில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மண் விளக்கு, மெழுகுவர்த்தி, விநாயகர் சிலை, லட்சுமி சிலை உள்ளிட்ட மாட்டுச் சாணத்தால் உருவாக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழாவில் பேசிய ராஷ்டிரிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கதிரியா, மாட்டுச் சாணம் (Cow Dung) அனைவரையும் காக்கக் கூடியது. குறிப்பாக கதிர்வீச்சில் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்றார்.
இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், இதை அடிப்படையாகக் கொண்டு சிப் ஒன்றை தயாரித்துள்ளோம். இதனை மொபைல் போன்களில் பயன்படுத்தி கதிர்வீச்சு நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்றும் கூறினார்.
மேலும் படிக்க...
மாட்டுச் சாணத்தில் இருந்து குளியல் சோப், டீ - வியப்பூட்டும் விபரங்கள்!
விவசாயிகளின் வாரிசுகளுக்கு சிறந்த வாய்ப்பு - மாதத்திற்கு 2 லட்சம் வரை ஊதியம்!