நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 July, 2022 6:53 PM IST
Cow urine price

பசுவின் கோமியத்தை(சிறுநீர்) லிட்டர் ரூ.4க்கு வாங்கும் திட்டத்தை முதல்வர் பூபேஷ் பாகல் தொடங்கிவைத்தார்.

தனதுவீட்டிலிருக்கும் பசுக்களின் சிறுநீரை 5 லிட்டர் விற்பனை செய்து ரூ.20 பெற்றுக்கொண்ட முதல்வர் பூபேஷ் பாகல், அந்தப் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று ஹரேலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோதன் நியாய் திட்டத்தின் கீழ் பசு கோமியம் வாங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

ஏற்கெனவே சத்தீஸ்கர் அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கோதன் நியாய் யோஜனா எனும் திட்டத்தை கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் பசுவின் சாணத்தைக் கிலோ 2 ரூபாய்க்கு கொள்முதல் செய்து கால் நடை வளர்ப்போருக்கு வருமானம் அளித்தது. இந்த சாணத்தை இயற்கை உரமாக மாற்றி, கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டது.

பசுவின் சாணத்தை கிலோ ரூ2க்கும், கோமியத்தை ரூ.4க்கும் வாங்கும் முதல் அரசு சத்தீஸ்கர்தான். பசுவின் கோமியத்தை பூச்சி கொல்லி மருந்தாக மாற்றுவதற்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

முதல்வரின் இல்லத்தில் நடந்த விழாவில், முதல்வர் பூபேஷ் பாகல், வேளாண்எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபட்டார். அதன்பின் பசுவை வணங்கி, அதன் சிறுநீரை விற்பனை செய்தார். இந்த விழாவின்போது, இயற்கை உரம் தயாரித்த 7442 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.17 கோடி ஊக்கத்தொகை வழங்கினார்.

முதல்வர் பூபேஷ் பாகல் கூறுகையில் “ நாங்கள் தொடங்கிய கோதன் நியாய் திட்டத்தின் கீழ் பணக்காரர் முதல் ஏழைகள் வரை யார் வேண்டுமானாலும் பசுவின் சாணத்தை கிலோ ரூ.2க்கு விற்கலாம், சிறுநீரை லி்ட்டர் ரூ.4க்கு விற்கலாம்.

கடந்த இரு ஆண்டுகளாக பசு சாணம் விற்பனையாளருக்கு ரூ.300 கோடி வழங்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் செழிப்பாக இருக்க வேண்டும், விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கவே இயற்கை முறை விவசாயத்தை ஊக்குவிக்கிறோம்

பசுவின் சிறுநீர் சிறந்த பூச்சி கொல்லியாக இருக்கும். இதன் மூலம் புதிதாக பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும், சுய உதவிக்குழுவினருக்கும் வருமானம் கிடைக்கும். இயற்கை உரம் பயன்படுத்தப்படும்போது, வேளாண் செலவு குறையும்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க:

எடப்பாடியாருக்கு நெருக்கடி கொடுக்க சசிகலா எடுத்த அதிரடி முடிவு

English Summary: Cow Urine Price: The state government buys cow's urine! Do you know what the price is?
Published on: 28 July 2022, 06:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now