News

Wednesday, 03 November 2021 09:01 AM , by: R. Balakrishnan

Crackers time for Deepavali

தமிழகத்தில் தீபாவளியன்று எப்போதெல்லாம் பட்டாசு வெடிக்கலாம், எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பட்டாசு (Crackers) வெடிக்கும் நேரக்கட்டுப்பாட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பட்டாசு வெடிக்கும் நேரம்

இது தொடர்பாக தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை  வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணிவரை பசுமை பட்டாசு (Green Crackers) வெடிக்க அனுமதிக்கப்படுகிறது.

ஒலி மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், நீதிமன்றங்கள், மத வழிபாட்டுத்தளங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவர்க்க வேண்டும்.

தீப்பிடிக்கக்கூடிய பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். காற்று மாசை ஏற்படுத்தாத வகையில் மக்கள் பொறுப்புடன் பண்டிகையை கொண்டாட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
பால் பாக்கெட் கவர்களை இனிமே குப்பையில் போடாம இப்படி பயன்படுத்துங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)