தமிழகத்தில் புரெவி புயலால் (Burevi Cyclone) ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து இரண்டு நாட்களில் அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்று வேளாண் துறை இயக்குநர் வ. தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பயிர்கள் பாதிப்பு:
தஞ்சாவூர் மாவட்டத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்து, ஆட்சியரகத்தில் அதிகாரிகளுடன் செவ்வாய்க் கிழமை ஆய்வு மேற்கொண்ட பின்னர் இத்தகவலை வேளாண் துறை இயக்குநர் அறிவித்தார். தமிழகத்தில் நிவர் புயலால் (Nivar Cyclone) 12,911 ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. புரெவி புயல் (Burevi Cyclone) காரணமாக 3.05 இலட்சம் ஹெக்டேரில் மழை நீர் தேங்கியது. இதில்,2.65 ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. முழுமையாக கணக்கெடுப்பு நிறைவடைந்த பின்பு தான், முழு விவரங்கள் தெரிய வரும். தொடர்ந்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் 50% கணக்கெடுப்பு பணி முடிந்து விட்டது. மீதமுள்ள பயிர் சேதங்களும் (Crop Damage) கணக்கெடுக்கப்பட்டு இரண்டு நாட்களில் அரசிடம் அறிக்கை அளிக்கப்பட உள்ளது.
இழப்பீடு:
புரெவி புயலை பொறுத்த வரை திருவாரூர், தஞ்சாவூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 11,370 ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 30% கணக்கெடுப்பு பணி முடிந்து விட்டது. மீதமுள்ள கணக்கெடுப்பு பணி விரைவாக நடந்து வருகிறது. மேலும், பயிர் காப்பீடு (Crop Insurance) செய்த விவசாயிகளுக்கு, காப்பீடு நிறுவனத்திடம் இருந்து விரைவில் இழப்பீடு பெற்றுத் தருவோம். பெரும்பாலான விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளதால் இழப்பீடு நிச்சயம் கிடைக்கும்.
முன்னதாக, மதுக்கூர் அருகே கண்ணனாறில் ஏற்பட்ட உடைப்பால் பாதிக்கப்பட்ட பெரியகோட்டை, சொக்கனாவூர், கிராமங்களில் பயிர் நிலை ஒரத்தநாடு உளூர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட அறுவடைக்குத் தயாரான பயிர்களை பார்வையிட்டார் இயக்குநர். அப்போது ஆட்சியர் ம. கோவிந்த் ராவ் மற்றும் வேளாண் இணை இயக்குநர் அவர்களுக்கு. ஜஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பிரதான் மந்திரி கிஷான் திட்டத்தில் பயனாளிகள் தேர்வில் கெடுபிடி! வேளாண் துறை அறிவிப்பு!