பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 25 November, 2024 2:41 PM IST
Insurance for coconut trees

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தாங்கள் சாகுபடி செய்த தோட்டக்கலைப் பயிர்களை காப்பீடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், தென்னை பயிர் சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளும், மரங்களின் எண்ணிக்கை வயது தொடர்பான சுயஉறுதி முன்மொழிவு படிவத்தை சமர்பித்து இயற்கை இடர்பாடுகளில் ஏற்படும் இழப்பினை ஈடு செய்ய காப்பீடு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெங்காயம் சாகுபடிக்கான காப்பீடு:

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2024-ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, தொட்டியம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் வட்டாரங்களில் பயிர் காப்பீட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

2024-ஆம் ஆண்டு ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடிக்கு 30.11.2024 வரை விண்ணப்பித்து, பிரீமியம் தொகையாக வெங்காயப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2063/-அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத் தொகையினை செலுத்தி பதிவு செய்திட வேண்டும்.

இப்பயிர்க் காப்பீடு பதிவு செய்திட நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன், பதிவு செய்யும் விவசாயியின் பெயர் மற்றும் விலாசம், நில பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்து, உரிய தொகையினை செலுத்தி, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தென்னை சாகுபடிக்கான காப்பீடு:

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுமார் 5000 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நாளடைவில் தென்னை பயிர் இயற்கை சீற்றங்களால் முழுமையாக பாதிக்கப்பட்டு முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டு விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் தென்னை மர பயிருக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட காப்பீட்டு தொகை வசதியினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தென்னை சாகுபடி விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ வரப்பில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ மரங்களாவது சாகுபடி செய்திருக்கவேண்டும். குறைந்தபட்சம் பலன்தரக்கூடிய 5 குட்டை மற்றும் ஓட்டுரகங்கள் 4 ஆம் ஆண்டு முதலும், நெட்டை இரகங்கள் 7 ஆம் ஆண்டு முதல் 60 ஆம் ஆண்டுவரை காப்பீடு செய்யலாம். வளமான மகசூல் தரக்கூடிய மரங்கள் இத்திட்டத்தில் சேர்க்கலாம்.

வயது வாரியாக காப்பீடு:

இதில் 4 முதல் 15 ஆண்டுகள் (வயது) வரையிலான தென்னை மரங்களுக்கு ரூ.900/- இழப்பீடு வழங்கப்படும். மரத்துக்கு விவசாயிகள் பிரீமிய தொகையாக ரூ.2.25 செலுத்த வேண்டும். 16 முதல் 60 வயது உள்ள தென்னை மரங்களுக்கு இழப்பீடு ரூ.1750/- இழப்பீடாக வழங்கப்படும். இதற்கான பிரீமியத் தொகையாக ரூ.3.50/- செலுத்த வேண்டும்.

Read also: பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!

விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை வயது, பராமரிப்பு முறை மற்றும் தற்போதைய நிலை பற்றிய சுயஉறுதி முன்மொழிவு படிவத்தை அளிக்க வேண்டும். தென்னை விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பெற்று பூர்த்தி செய்து ப்ரீமியத் தொகையினை Agricultural Insurance Company of India Ltd, Chennai எடுத்து நில ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more:

வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!

பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!

English Summary: Crop Insurance for coconut trees by age variation In Tamilnadu
Published on: 25 November 2024, 02:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now