பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தால், பல கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர், என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இயற்கை மாற்றம் உட்பட பல்வேறு பிரச்னைகளால், விவசாயிகள் கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர். இவர்களை பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசு, பி.எம்.எப்.பி.ஒய்., எனப்படும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை (Prime minister crop insurance scheme) ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது.
பாராட்டு தெரிவித்த மோடி:
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 'டுவிட்டரில்' பிரதமர் மோடி (PM Modi) கூறியிருப்பதாவது: பி.எம். எப்.பி.ஒய்., திட்டத்தால், பல கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இத்திட்டம், விவசாயிகளுக்கு எப்படி உதவியுள்ளது என்பதை, 'நமோ ஆப்' (Namo App) வழியாக அறிந்து கொள்ளலாம். இந்த திட்டம், விவசாயிகளுக்கு பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள பெரிதும் உதவியுள்ளது. இத்திட்டத்தால் பலன் அடைந்த விவசாயிகளுக்கு, என் பாராட்டுகள்.
விவசாயிகளுக்கு உதவும் திட்டம்:
அதிக மழை பெய்து பயிர்கள் மூழ்கினாலோ, கடும் வெப்பத்தால் மழையின்றி பயிர்கள் கருகினாலோ அல்லது பருவம் தவறிய மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டாலோ விவசாயிகளுக்கு கைகொடுக்கும் திட்டம் தான் பயிர் காப்பீட்டுத் திட்டம். இத்திட்டத்தில் மூலம் பல விவசாயிகள் பயனடைந்துனர். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தனிநபர் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு (Relief fund) வழங்கப்படுவதில்லை என்பது தான் இதில் உள்ள ஒரு குறை. சில வாரங்களுக்கு முன் விவசாயிகள் தனிநபர் பயிர் பாதிப்புக்கு (Individual crop damage) இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது மட்டும் அரசால் நிறைவேற்றப்பட்டால், விவசாயிகளுக்கு இன்னும் நற்செய்தியாக அமையும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வரவிருக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான எதிர்ப்பார்ப்பு!
பருவம் தவறிய மழையால் விவசாயிகள் வேதனை! வழிகாட்டும் வேளாண் துறை!