News

Wednesday, 14 December 2022 07:15 PM , by: T. Vigneshwaran

Crop Insurance

பிரதமர் பயிர்காப்பீடு திட்டத்திற்காக மத்திய அரசு செலுத்தும் பிரீமியம் தொகை குறைந்து வருவதால் , மாநில அரசே 75% பிரீமியம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மழை, வெள்ளம், வறட்சி, போன்ற இயற்கை பேரிடர்களால் விவசாயம் பாதிக்கப்படும் போது, விவசாயிகளின் இழப்பை ஈடுகட்டுவதற்காக பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டம் (பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா) என்கிற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் சுமார் 5.5 கோடி விவசாயிகள் பயிர்க் காப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ளனர். தற்போது வரை சுமார் ரூ. 21,000 கோடி ரூபாய் பிரீமியம் வசூல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான காப்பீட்டுத் தொகையை வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் 35.54 லட்சம் ஏக்கர் விலை நிலங்கள் பயிர் காப்பீடு செய்யப்பட்டன. தற்போது 2021-22ம் நடப்பு நிதியாண்டில் அது 40.74 லட்சம் ஏக்கராக அது அதிகரித்திருக்கிறது. நடப்பு பருவ ஆண்டில் இதுவரை 12.15 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பயிர்காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பிரதமர் பயிர்காப்பீடு திட்டத்திற்காக மத்திய அரசு செலுத்தும் பிரீமியம் தொகை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. இதனால் மாநில அரசு 75% பிரீமியம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

7th Pay Commission: ஊழியர்களுக்கு ரூ.95680 கிடைக்கும்

ஆடு வளர்ப்பு: பால் மற்றும் இறைச்சிக்கு சிறந்த ஆடு இனங்கள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)