பரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், வயலில் கரு ஊதா நிறத்தில் விளைந்த நெல் வயலில் குறியீடுகள் வரைந்து அசத்தியுள்ளார் கடலூர் மாவட்ட இயற்கை விவசாயி செல்வம்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி செல்வம், கடந்த 10 ஆண்டுகளாக பரம்பரிய நெல் ரகங்களை கொண்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, ஆத்தூர் கிச்சிலி சம்பா, கருங்குறுவை, கருப்புக்கவுனி சீரக சம்பா, சின்னார், ஜாக்கோபார் உள்ளிட்ட பதினைந்துக்கும் அதிகமான நெல் ரகங்களைப் பயிரிட்டு, அதனை நெல்லாகவும், அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார்.
நெல் நாற்றில் ஓவியம்!
இந்நிலையில், தனது பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்தும் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக சின்னார் நெல் ரகம் மூலம் தனது வயலில் கணிதம் தொடர்பான குறியீடுகளை போல் நாற்று நட்டுள்ளார். சொர்ணமசூரி நாற்றுகளுக்கு இடையே சின்னார் ரக நெல் நாற்றுகள் கரு ஊதா நிறத்தில் காட்சியளிப்பது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
பாரம்பரிய நெல் ரகத்தின் மருத்துவ குணங்கள்!
இது குறித்து இயற்கை விவசாயி செல்வம் கூறுகையில், பாரம்பரிய அரிசியில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதாகவும், இது போன்ற அரிசி வகைகளை சாப்பிடும் போதும் உடலில் ஏற்படும் சர்க்கரைநோய், மூட்டுவலி, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பலவற்றிற்கும் இவை சிறந்த மருந்தாக இருக்கும் என்றார். தனது இந்த முயற்சி பாரம்பரிய அரிசி ரகங்களின் முக்கியத்துவத்தையும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைப்பாதாக அமையும் என்று நம்புவதாக அவர் கூறினார்.
செல்வம் தனது வயலின் நடுவே மலைப்பிரதேசத்தில் விளையும் சின்னார் வகை கருமையான நெல் நாற்றால் ஏர்கலப்பை, கணிதக்குறியீடுகள், எண்கள், அவருடைய பெயர் ஆகியவற்றை வரைந்துள்ளார். இது காண்போரை வியக்க வைத்துள்ளது. இதனை பலரும் நின்று ஆச்சர்யத்தோடும் பார்த்து செல்கின்றனர்.
மேலும் படிக்க..
இயற்கை முறையில் முந்திரி சாகுபடி - அசத்தும் கடலூர் விவசாயி ராமராஜன்!!
பாரம்பரிய நெல் ரகங்களை விளைவித்து இயற்கை விவசாயத்தில் முத்திரை பதிக்கும் IT அதிகாரி!
ஷேர் மார்க்கெட் டெக்னிக்- விவசாயத்திலும் டபுள் லாபம் ஈட்டலாம்!