தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர், கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டன.
இதனால் அனைத்து மாவட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒரே மாதிரியான தளர்வுகள் அமலில் இருந்தது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கான தடை, தியேட்டர்களை திறப்பதற்கான தடை உள்ளிட்ட சில விஷயங்ககளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வருகிற 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பதால் ஒவ்வொரு முறையும் ஊரடங்கில் தளர்வுகளையோ அல்லது கட்டுப்பாடுகளையோ விதித்தபோது மூத்த அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், இதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசித்து முதல்வர் ஸ்டாலின் தளர்வுகளை அறிவித்து வருகிறார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவல், அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆழமாக ஆலோசிக்கப்பட்டது.
அதனடிப்படையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தளர்வுகளை தவிர கூடுதலாக எந்த வித தளார்வுகளுமின்றி வருகிற ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய தளர்வுகள் எதுவும் அளிக்கப்படாதது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கடந்த சில நாட்களாக அளிக்கப்பட்ட தளர்வுகளால் நகரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொது மக்கள் அதிகம் கூடிவருவதால், அதனால் நோய்த் தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டு வருவதாக விவாதிக்கப்பட்டது. பொதுமக்கள் தளர்வுகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது,மற்றும் அதனை பின்பற்றாவிட்டால் அதன் விளைவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
தமிழகத்தில் திடீரென்று அதிகரித்த கொரோனா பாதிப்புகள்!
மானிய விலையில் உளுந்து விதை- விவசாயிகளுக்கு அழைப்பு!